ஆயுள் அதிகரிக்க . . .
Posted on September 18, 2011,By Muthukumar
தினமும், ஒரு மணி நேரம் தொடர்ந்து, “டிவி’ பார்த்தால், ஒரு
வரது ஆயுளில், 22 நிமி டங்கள் குறைந்து விடும். மா றாக, தினமும், 15 நிமிட ங்கள் உடற்பயிற்சி செய்தா ல், அவரது ஆயுள், மூன்று ஆ ண்டுகள் கூடும் என ஆய் வில் தெரிய வந்துள்ளது.
மனித வாழ்க்கையில் பொழுதுபோக்கு சாதனங்களில் மிகப் பெரிய இடத்தை பிடித்துள்ளது, “டிவி!’
ஆஸ்திரேலியாவில் உள்ள புக ழ்பெற்ற குயின்ஸ்லேண்ட் பல் கலைக் கழகத்தில் மக்கள் தொகை நலன் குறித்தான பள்ளி ஆய்வு மாணவர்கள், 2000ம் ஆண்டு, 11 ஆயிரம் பேரிடம், “டிவி’ பார்ப்பது குறித்த ஆய்வு நடத்தினர். இவர்கள் அனைவரும், 25
வயதுக்கு மேற்பட்டவர்கள். இ ந்த ஆய்வின் தொடர்ச்சியாக, எட்டு ஆண்டுகளுக்குப் பின் மீண் டும் ஆய்வு நடத்தினர்.
ஆய்வில் இருந்து அவர்கள் எட்டு ஆண்டுகளில், 9.8 பில்லி யன் மணி நேரம், “டிவி’ பார்த் துள்ளதும், அதன் மூலம், இரண் டு லட்சத்து, 86 ஆயிரம் மணி நேரம் அவர்களது ஆயுள் குறை ந்து விட்டதும் தெரிந்தது. இவ் வாறு ஒரு மணி நேரம், “டிவி’ பார்த் ததால், 22 நிமிடங்கள் ஆயுள் குறைந்துள்ளது கண்ட றியப்பட்டது. இது ஒரு மணி நேரத்தில், இரண்டு சிகரெ ட்டுக்கள் புகை த்தால் ஏற்படும் பின் விளைவிற்கு ஒப்பானது.
“இதில், ஆண், பெண், குழந்தைகள், முதியவர்கள், ஆரோக்கிய மானவர்கள், உடல்நலம் குன்றியவர்கள் என பலரையும் கண் காணித்தோம். அதன் அடிப்படையில் தினமும், 15 நிமிடங்கள் சுறுசுறுப்பாக நடை பயணம் செய்தால், அவர்களது ஆயுள் மூன் று ஆண்டுகள் அதிகரிப்பது தெரிய வந்துள்ளது…’ என்றார்.
No comments:
Post a Comment