Labels

Friday, September 9, 2011

சக்கைபோடு போடும் டி.என்.ஏ. தொழில்

சக்கைபோடு போடும் டி.என்.ஏ. தொழில்

துபாயில் வசிக்கும் ரமேஷ்வருக்கு சில நாட்களாக ஓர் உறு த்தல்.
சட்டென்று வீட்டு படுக்கை விரிப்பை உருவி எடுத்தா ர், காது குடையும் `பட்’ ஒன்றை எடுத்து வாயில் நுழைத்து உமிழ் நீரை வழித்தார். இரண் டையும் ஓர் அட்டைப் பெ ட்டியில் போட்டு ஐதராபாத் துக்கு கூரியரில் அனுப்பி வை த்தார்.
சில நாட்கள் கழித்து ரமேஷ் வருக்குப் பதில் வந்தது:
“படுக்கை விரிப்பில் உள்ள `கறை’, நீங்கள் சந்தேகப்பட்ட மா திரியே விந்துக்கறைதான். அதன் டி.என்.ஏ.வும், உங்களின் டி. என்.ஏ.வும் ஒத்துப்போகவில்லை.”
குடும்பஸ்தராகி இரண்டே ஆண்டுகள் ஆகியிருக்கும் 34 வயது ரமேஷ்வரு க்கு இது அதிர்ச்சி. ஆனால் தான் ஓர ளவு எதிர்பார்த்த விஷயம்தான் என் பதால் சமாளித்துக் கொண்டார்.
“நான் மட்டும் இப்படி டி.என்.ஏ. டெ ஸ்ட் செய்திருக்காவிட்டால் என்னைச் சந்தேகம் அரிச்சித் தின்றிருக்கும்” என் கிறார் இந்த முன்னாள் டெல்லிவாசி. எல்லாம் வெட்ட வெளிச்சமாகிவிட்ட நிலையில், அடுத்து என்ன செய்வது என்று மனைவியுடன் `சுமூகமாக’ பே சி வருகிறார்.
ரமேஷ்வரின் உமிழ்நீரில் உள்ள டி.என். ஏ.வையும், படுக்கை விரிப்பு விந்துக்கறை டி.என்.ஏ.வையும் ஒப் பிட்டு அவருக்கு `ரிசல்ட்’ கூறியது, ஐதராபாத்தில் உள்ள ஓர் ஆய்வகம்.
உங்களுக்கு இது வித்தியாசமாகத் தெரியலாம். ஆனால் ஐதரா பாத் ஆய்வகத்தைப் பொறுத்தவ ரை, `நடத்தை சோதனை’ எனப் படும் இந்த சோதனையை மா தம் இரண்டு, மூன்று செய்கிறா ர்கள். இதற்கான `சாம்பிள்கள்’ உள்நாட்டில் இருந்தும் வெளி நாடுகளில் இருந்தும் வருகின் றன.
துரோகம் செய்யும் துணையைக் கண்டுபிடிக்க மேலை நாடுகளி ல் பிரபலமான இந்த டெஸ்ட், தற்போதுதான் இந்தியாவில் பி ரபலமாகி வருகிறது.
“நாங்கள் 2009-ம் ஆண்டில் இந்த ஆய்வகத்தைத் தொடங்கிய போது `நடத்தைச் சோதனையில்’ ஆர்வம் காட்டுவோர் யாரும் இல்லை. இன்றோ இந்த சோதனைக்கான கோரிக்கை அதிகரித் துக் கொண்டே இருக்கிறது” என்கிறார், ஐதராபாத் ஆய்வகத் தின் டி.என்.ஏ. சோதனை ஆலோசகர் ரீத்து சுஹானி.
தங்கள் ஆய்வகத்துக்கு, பய ன்படுத்திய ஆணுறை, சிக ரெட் பஞ்சு, உடல் ரோமம் அகற்றும் பட்டை, நாக்கு வழிப்பான், காது `பட்ஸ்’, ந கத் துணுக்கு, ரத்தக் கறை படிந்த படுக்கை விரிப்பு எ ன்று பலதும் ஆய்வுக்கு வருவதாக ரீத்து கூறுகிறார்.
டெல்லி அருகே குர்கானில் உள்ள இதேபோன்ற மற்றொரு ஆய் வகமும் `நடத்தை சோதனை’ குறித்து இள வயதினரிடம் இரு ந்து மாதம் நான்கைந்து விசாரணைகள் வருவதாகத் தெரி விக் கிறது.
இப்படி விசாரிக்கும், சோதனைக்கு சாம்பிள் அனுப்பும் நபர்களில் பெரும்பாலானவர்கள், திருமண மான இளம் ஆண்கள் தான். மனை வி மீது சந்தேகம் கொண்டு, அதை ச்சரிபார்க்குமாறு கூறுகிறார்களா ம்.
இப்படி ஏடாகூட நிரூபணத்துக்குத் தான் டி.என்.ஏ. பயன்படும் என்பதி ல்லை. உங்களுக்கு மூக்குக்கு மே ல் வரும் முன்கோபத்துக்கு என்ன காரணம் என்று அறிவது முதல், தலை முன்கூட்டியே வழுக் கை ஆகி விடுமா என்பது வரை எல்லாவற்றையும் டி.என்.ஏ. சோதனை மூலம் அறியலாம். கொலை, கற்பழிப்பு மற்றும் பிற குற்றங்கள் தொடர்பான விசாரணைக்குத்தான் டி.என்.ஏ. பயன் படும் என்பது பழைய கதையாகி விட்டது.
எவருக்கெல்லாம் சர்க்க ரை நோய், புற்றுநோய் ஆப த்து அதிகம், பாதிப்பூட்டும் பரம்பரை வியாதி தமக்கும் வருமா என்று கூட கூறி விடலாம் என்கிறார்கள் டி. என்.ஏ. ஆய்வுக் காரர்கள். அவ்வளவு ஏன், உங்கள் குழ ந்தை கிரிக்கெட்டில் சச்சின் போலவோ, கால்பந்தில் பெக்காம் போலவோ ஜொ லிக்க அவனது டி.என்.ஏ.விலேயே `பிராப்தம்’ இருக்கிறதா, எந் த விளையாட்டில் அவன் அசத்த வாய்ப்பிருக்கு என்று கூட புட் டுப்புட்டு வைத்து விடுவோம் என்று தலையில் அடித்துச் சத் தியம் செய்கிறார்கள்.
மணமகனுக்கும், மணமகளுக்கும் தற்போது `ஜாதகப் பொரு த்தம்’ பார்க்கிற மாதிரி, `மரபணு பொருத்தம்’ பார்க்க ஆரம்பித் திருக் கிறார்கள். இந்தப் பொருத்தமுள்ள இருவர் வாழ்க்கையில் இணையும் போதும் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் `சூரர்களாக’ இருப்பார் களா என்பதை அறிவதோடு, தம்பதி யரின் தாம்பத்ய வாழ்க்கையும் ரொ ம்பவே திருப்திகரமாக அமையுமா என்பதையும் தெரிந்துவிடலாமாம்.
அடுத்த முக்கியமான விஷயம், தற் போது பலருக்கும் தலைக்கு மேல் உள்ள பிரச்சினையான, முடி இழப்பு குறித்த சோதனை. மும்பையில் உள்ள ஒரு டி.என்.ஏ. ஆய்வ கம், `ஜெனிட்டிக் ஹேர் லாஸ் டெஸ்ட்’ என்ற சோதனையை கடந்த ஆண்டு தொடங்கியது.
வழக்கமான வயதுக்கு முன்பாக யாருக்கு வழுக்கை விழக் கூ டும் என்று தங்களால் கூற முடியும் என்கிறார்கள் இவ ர்கள். இதுவரை 30 முதல் 40 வயதுக்கு உட்பட்ட 40 ஆண்கள் இங்கு இந்தச் சோதனையைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் 70 சதவீதம் பே ருக்கு முன்கூட்டியே முடி கொட்டுவதற்கு `பிரகாச மான’ வாய்ப்பிருக்கிறது என்று கூறிவிட்டது ஆய் வகம்.
சரி, வரப் போவதை முன்கூட்டியே அறிந்து கவலைப்படுவதில் என்ன லாபம்? “முடி இழப்புக்கு அதிக `ரிஸ்க்’ உள்ளவர்கள் `டெர்மடாலஜிஸ்டை’ பார்த்து உடனே அதைத் தடுப்பதற்கான சிகிச்சையைத் தொடங்கலா மே?’ என்று `லாஜிக்கலாக’ கேட்கி றார்கள்.
இவை மட்டுமல்ல, எல்லோ ருக்குமே அவரரவர் மூதாதை யர் பற்றி அறிய ஆவலாயி ருக்கும். ஆனால் நம்மால் நமது தாத்தா- பாட்டி, அதைத் தாண்டினால் கொள்ளுத் தாத் தா- கொள்ளுப் பாட்டி வரை கூற முடியும். அதற்கு மேல் தலையைத்தான் சொறி வோம்.
`இவ்வளவு கம்பீரமாயிருக்கேனே… ஒருவேளை நான் ராஜ ராஜ சோழன் பரம்பரையில வந்தவனா இருப்பேனோ?’என்று பலருக்கும் சந்தேகம் வந்து போயிருக்கும். அதையும் டி.என்.ஏ. சோதனை மூலம் உறுதிப்படு த்தி விடலாம் என்று உறுதி கூறுகிறார்கள்.
`ஸ்லம்டாக் மில்லியனர்’ புக ழ் நடிகை பிரீடா பின்டோ வுக்குக் கூட இந்தச் சோதனை செய்துகொள்ளும் ஆசை வந் திருக்கிறது. “போர்த்துக்கீசி யர்கள் நான் அவர்கள் வம் சாவளியில் வந்தவள் என்கி றார்கள். எனக்கு அது பிடிக்கவில்லை. எனவே இந்தச் சோத னை செய்ய விரும்புகிறேன்” என்கிறார் பீரிடா.
நாம் உண்மையில் `மண்ணின் மைந்தர்களா’ அல்லது வெளி நாட்டில் இருந்து வந்து இங்கு குடியேறியவர்களா என்றும் டி. என்.ஏ. கூறிவிடுமாம். ஒருவித ஆர்வத்தின் காரணமாக தற் போது அதிகம் பேர் இந்த `மூதா தையர் சோதனை’க்கு உமிழ் நீர் சாம்பிளை அனுப்புகிறார்கள். மும்பையில் உள்ள ஆய்வகத்து க்கு மட்டும் இச்சோதனைக்கு மாதம் 40 முதல் 50 சாம்பிள்கள் வருகின்றன.
ரூ. 17,420 கட்டணம் செலுத்தி னால் போதும், உலகின் எந்த நாட்டு இனத்துடன் உங்களின் டி.என்.ஏ. பொருந்திப் போகிறது கண்டுபிடித்து, அதை அழகான உலக `மேப்’பில் குறிப்பிட்டு, பொன்னிற `பிரேம்’ போட்டு உங் களுக்கு அனுப்பி வைத்து விடுவார்கள். டெல்லியில் சுமார் 100 பேர் இந்த `மேப்’பை தங்கள் வீட்டில் பெருமையாக மாட்டி வை த்திருக்கிறார்கள்.
நம்மில் பலர் கறுப்பாக இருப்பதால் நாம் ஆப்பிரிக்க வம்சா வளியில் வந்தவர்களாக வோ, ஆசியக் கண்டத்தில் இருப்பதால் பிற ஆசிய நாட் டவர்களுடனோ நெருக்க மான தொடர்பு உடையவர் களாக இருக்கக்கூடும் என் று எண்ணுவோம். ஆனால் மூதாதையர் சோதனைக்கு வந்த பல இந்தியர்களின் டி.என்.ஏ., ஐரோப்பிய இனத் துடன் அதிக நெருக்கமாக இருக்கிறதாம். `இதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. இந்தியா வில் முதலில் குடியேறிய இனங்களுள் ஒன்று ஆரிய இனம். மத்திய காக் கேசிய பிராந்தியச் சேர்ந்த ஆரிய இனத்தைச் சார்ந்த மக்கள்தான் ஐரோப்பாவில் பல்கிப் பெருகினர்’ என்று அதற்கு விளக்கம் கூறுகிறார்கள், டி.என்.ஏ. ஆய்வாளர்கள். இதற்கி டையில் டி.என்.ஏ. டெஸ்டை நூற்றுக்கு நூறு சதவீதம் நம்ப முடியாது என்று சர்ச்சை கிளப்புபவர்களும் இருக்கிறா ர்கள். ஆனாலும் சக்கை போடு போடுகிறது டி.என்.ஏ. தொழில்!

No comments:

Post a Comment