Labels

Thursday, August 6, 2015

குழந்தை பாக்கியம்தரும் துரியன்பழம்


துரியன் பழம் மக்களிடம் மிகவும், பிரபலமான பழமாக உள்ளது. நறுமண வாசனையுடைய துரியன் பழம், மிகுந்த இனிப்பு சுவையை கொண்டுள்ளது. இந்த துரியன் பழத்தை சாப்பிட்டால், உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். அதிலும் பழங்கள் மட்டுமின்றி, இலைகளும் பல மருத்துவ பலன்களை கொண்டுள்ளது.
அதே சமயம் சில நேரங்களில் இப்பழங்களை சாப்பிட்டால், உடலில் நோய்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்ற கருத்தும் மக்களிடையே உள்ளது. உண்மையில் அவ்வாறு சொல்வதில் தவறு ஏதும் இல்லை.
ஏனெனில் துரியன் பழம் சாப்பிடுவதால், உடலில் ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என சில மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த கூற்றில் எவ்வளவு தூரம் உண்மை உள்ளது என தெரியவில்லை.
இருப்பினும் போதிய அளவு துரியன் பழத்தை சாப்பிட்டால், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
துரியன் பழத்தில் கால்சியம், மாங்கனீசு, கரோட்டின், கொழுப்பு, இரும்புச்சத்து, ரிபோப்ளேவின், கார்போஹைட்ரேட், தாமிரம், போலிக் ஆசிட், வைட்டமின் சி, நார்ச்சத்து, துத்தநாகம், நியாசின், புரதம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம் உள்பட பல சத்துக்கள்
நிறைந்துள்ளது.
மேலும், வாழைப்பழத்தை விட, 10 மடங்கு அதிகமாக இரும்புச்சத்து, பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. குழந்தை இல்லாத தம்பதியர் தேடி சாப்பிடும் பழமாக துரியன் உள்ளது. குழந்தை பிறப்புக்கு இந்த பழம் காரணமாக உள்ளது என கருதப்படுவதால், சீசன் காலங்களில் இதற்கு பெரும் கிராக்கி உள்ளது. கிராக்கிக்கு ஏற்றாற்போல் இதன் விலையும் சீசன் காலங்களில் அதிகம்.

No comments:

Post a Comment