Labels

Tuesday, August 18, 2015

எடை அதிகரிக்க விருப்பமா?


உடல் எடை அதிகமாக இருப்போர், அதை குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். சிலர் என்ன தான் உணவுகளை உண்டு உடல் எடையை அதிகரிக்க நினைத்தாலும், எடை மட்டும் கூடாமல் இருக்கும். எடையை அதிகரிக்க, அதிகளவு கலோரி நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்
ஏனெனில், சரியான அளவு ஊட்டச்சத்துக்கள், புரோட்டீன், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகள் உடலுக்கு கிடைத்தால் தான், விரைவில் உடல் எடையை கூட்ட முடியும். எனவே, எந்த உணவுகளை உட்கொண்டால், உடல் எடை அதிகரிக்கும்.
புரோட்டீன்: புரோட்டீன் அதிகம் இருக்கும் உணவுப் பொருட்களான இறைச்சி, மீன்கள், முட்டை, வான் கோழி, சிக்கன் போன்றவற்றை அதிகம் தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையை அதிகரிக்க நினைப்போருக்கு எளிதான வழி. அதிலும் சோயா பொருட்களை அதிகம் சேர்த்துக் கொண்டால் நல்லது.
கொழுப்புகள்: பாதாம் பருப்பு, ஆலிவ் ஆயில், சூரிய காந்தி எண்ணெய், நல்லெண்ணெய், முந்திரி பருப்பு, வேர் கடலை, வெண்ணெய், பால் போன்ற அனைத்திலும் கொழுப்புகள் அதிகம் நிறைந்துள்ளது. ஆகவே இதற்கான டயட் இருக்கும் போது, தினமும் உடலில் 10 சதவீதம் கொழுப்பு சத்தானது உடலில் சேர வேண்டும். இவை அனைத்துமே ஆரோக்கியமான கொழுப்புகள் தான்.
உடல் எடையை அதிகரிக்க, அடிக்கடி ஏதேனும் சாப்பிட்டுக் கொண்டிருப்பீர்கள். அவ்வாறு ஏதேனும் ஒன்றை சாப்பிடுவதற்கு பதிலாக, உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையில் இருக்கும், ஆப்பிள் உட்பட சத்துமிக்க உணவு வகைகளை உட்கொள்ளலாம்.
அதிகளவு ஒரே நேரத்தில் சாப்பிட்டால், அமிர்தம் கூட நஞ்சாகும்.

No comments:

Post a Comment