Labels

Friday, January 30, 2015

நரம்புத் தளர்ச்சியை நீக்கும் சௌ-சௌ

Posted by Muthukumar,on Jan 30,2015
CHOW CHOW
நாம் உணவில் சேர்த்துக்கொள்ளும் காய்கறிகளில் சில காய் வகைகளை எப்போதாவது சேர்த்துக்கொள்வோம். அப்படி எப்போதாவது சேர்த்துக்கொள்ளும் காய்கறிகளில் சௌ-சௌவும் ஒன்று. சௌ-சௌவில் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் கே போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. 100 கிராம் சௌ-சௌவில் 17.8% கார்போஹைடெரேட், 10.7% ஸ்டார்ச் 10.5% போலேட் சத்து, 5.4% புரதச் சத்து, 6.7%சுண்ணாம்புச் சத்து, 4.5% பாஸ்பரஸ், 9% மாங்கனீசு கொண்டுள்ளது.
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சௌ சௌவை சாப்பிடலாம். இது நரம்புத் தளர்ச்சியைப் போக்கி நரம்புகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளையும் நீக்கி வயிற்றை சுத்தமாக வைத்துக்கொள்ளும் சக்தி இதற்கு உண்டு.
உயர் ரத்த அழுத்தத்தைக் குறைத்து, உடலை சமநிலையில் வைத்துக்கொள்ளும். மலச் சிக்கல் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் இந்த காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.பெருங்குடல் சிறுகுடல் சம்பந்தமான பிரச்சினைகளை நீக்கி குடல் மூலம் உருவாகக்கூடிய பிரச்சினைகளை சரிப்படுத்துகிறது.
கர்ப்பிணிப் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் கை கால்களில் வீக்கம் ஏர்படும். அதனால் நீர்ச் சத்து மிகுந்த காய்களில் ஒன்றான சௌசௌவை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதை உணவில் சேர்த்துக்கொள்வதால் குழந்தையையும் நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்கிறது. சிறு வயதிலேயே முகச் சுருக்கம் ஏறப்ட்டுவிட்டதே என கவலைப்படுபவர்கள் சௌசௌவை உணவில் தாராளமாக பயன்படுத்தி வந்தால், முகத்தில் உள்ள சுருகக்ம் நீங்கிவிடும்.
சௌசௌவில் காணப்படும் வைட்டமின்கள் புற்றுநோய்த் தடுப்பியாக செயல்படுகிறது. எனவே இதைஉணவில் பயன்படுத்தினால், புற்றுநோய் வராமல் பாதுகாத்துக்கொள்ளமுடியும். தைராய்டு கோளாறால், அவதிப்படுபவர்கள் சௌசௌவைப் பயன்படுத்தலாம்.
சௌசௌவில் காணப்படும் காப்பர், மங்கனீசு, தைராய்டு நோயால் அவதிப்படுபவர்கள் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த மருந்தாகும். இதை உணவில் எடுத்துக்கொண்டால், தைராய்டு கோளாறு நீங்கும். சௌசௌவில் கால்சியம் சத்துக்கள் காணப்படுவதால், எலும்புகள் வலுப்பெற செய்கிறது. எனவே வளரும் குழந்தைகளுக்கு சௌசௌ காயை உண்ண கொடுக்கலாம்.
கொழுப்புகளைக் குறைக்கவும் இது பயன்படுகிறது. வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் சேர்ந்து இருக்கும் அதிகப்படியான கொழுப்புகளை கரைக்க சௌசௌவை வேகவைத்து உப்பு, மிளகு தண்ணீர் சேர்த்து சூப் செய்து காலை மாலை வேளைகளில் உணவிற்கு முன் இதைப் பருகலாம்.

No comments:

Post a Comment