Labels

Friday, April 17, 2015

சிறுநீர் கழிப்பதில் சிக்கலா?


ஆண்களின் சிறுநீர்ப் பைக்குக் கீழே மற்றும் சிறுநீர் பாதையைச் சுற்றி இருக்கிறது, புராஸ்டேட். இதன் வழியேதான் உடலில் இருந்து சிறுநீர் வெளியேறுகிறது. 50 வயதுக்குப்பின் பிராஸ்டேட் பிரச்னை என்பது பொதுவான பிரச்னையாக இருக்கிறது.
ஆண்களின் பாலியல் ஹார்மோன் செயல்பாடு காரணமாக புராஸ்டேட் விரிவடைகிறது. பெரும்பாலானவர்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படுவதில்லை. எனினும் சில நோயாளிகளுக்கு இதனால், புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பாதிப்பு ஏற்படுத்தாத புராஸ்டேட் வீக்கம் பாதிப்பு ஏற்படுத்தாத புராஸ்டேட் வீக்கம், பெரிய சுரப்பி சிறுநீர் குழாய் மேல் அழுத்தி, சிறுநீர் வெளியேறுவதைத் தடுக்கலாம். இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர் கழித்த பின் திருப்தி இன்மை, ஒழுகுதல் மற்றும் இறுதியாக முழுவதுமாக சிறுநீர் வெளியேறுதல் ஆகியவை முக்கிய அறிகுறிகள். புராஸ்டேட் வீக்கம் என்பது, சிறுநீர்ப் பாதையில் தொற்று ஏற்படலாம் என்பதற்கான முன் அறிகுறியாகும். புராஸ்டேட் பெருக்கத்தை டிஜிட்டல் முறையில், மலக்குடல் சிரை பரிசோதனை செய்து ஆரம்ப கட்டத்திலேயே தெரிந்துகொள்ளலாம்.
அல்ட்ராசவுண்ட் கிராபிக் மூலம், புராஸ்டேட் வீக்கத்தை உறுதி செய்யலாம். சிறுநீர் கழித்தபின்னர் சிறுநீர் பையில் இருந்து எவ்வளவு சிறுநீர் வெளியேறாமல் உள்ளது என்பதையும் அளவிடமுடியும். சிறிய புராஸ்டேட் வீக்கத்தை, சில மருந்துகளுடன் கூடிய சிகிச்சையின் மூலம் குணப்படுத்த முடியும். எனினும் மருந்து சிகிச்சையின் மூலம் இதைக் குணப்படுத்த முடியாது. பெரிய புராஸ்டேட் பெருக்க அறிகுறி, மருந்து சிகிச்சைக்கு ஒத்துழைக்காது. அறுவை சிகிச்சையின் மூலமே புராஸ்டேட் பெருக்கத்தை வெட்டிக் குறைக்க முடியும். புராஸ்டேட் வீக்கத்தை தற்போது சிறுநீர் வடிகுழாய் வழியே அகற்றமுடியும். அடிவயிறு அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவது ஏறக்குறைய வழக்கொழிந்து விட்டது.
புராஸ்டேட் புற்று நோய் 65 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு, புராஸ்டேட் புற்று நோய் ஏற்படுவது பொதுவானதாக இருக்கிறது. புற்று நோயால் ஏற்படும் வலுவின்மை அறிகுறிகளே, இதன் அறிகுறி. சிகிச்சையளிக்கப்படாத கேன்சர், உடலின் எல்லாப் பாகங்களிலும் பரவி வலியை, சுகமின்மையை அதிகரிக்கும். இறுதியில் மரணத்தை ஏற்படுத்தும். மலக்குடல் சிரை சோதனை மூலம் முறையாக
பரிசோதித்து, புராஸ்டேட் புற்று நோயை முன்கூட்டியே கண்டுபிடிக்கலாம். அறிகுறிகள் தோன்றும் முன், இதைக் குணப்படுத்த முடியும்.
புராஸ்டேட் புற்று நோய்க்கான அறுவை சிகிச்சை, ஹார்மோன் சிகிச்சை, ஒளிக்கதிர் சிகிச்சை ஆகிய பல்வேறு சிகிச்சை முறைகள் இருக்கின்றன. நோயின் தன்மையைச் சார்ந்துதான், அறுவை சிகிச்சையின் முடிவு இருக்கிறது. மலக்குடல் சிரை உள்ளிட்ட முறையான மருத்துவப் பரிசோதனைகள், புராஸ்டேட் பிரச்னைக்கு எதிரான நல்ல பாதுகாப்பாகும். சிறுநீர் முந்துதல், சிறுநீர் கழிப்பதில் பிரச்னை ஆகிய அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை அணுகவும். தீவிரமான அறிகுறி வரும் வரை காத்திருந்தால் விளைவுகள் மோசமானதாக இருக்கலாம்.

No comments:

Post a Comment