Labels

Sunday, March 29, 2015

புளி இருக்க பயம் ஏன்?



நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் புளியில் கால்சியம், வைட்டமின் "பி’ நிறைந்துள்ளது. தவிர பாஸ்பரஸ், இரும்பு போன்றவைகளும் உண்டு. உணவில் மணம், சுவை ஊட்டவும் புளி பயன்படுகிறது. புளி தென்னிந்தியாவின் ஆதார உணவுகளில் ஒன்று. குழம்பு, ரசம், சாம்பார், புளிக் குழம்பு, புளியோதரை, சட்னி வகைகள். ஆந்திராவில் புளியால் ஆன "பச்சி புளுஸ்” பிரசித்தம். தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் புளியை வைத்து பல உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.
மருத்துவ குணங்கள்:
புளிய மரத்தின் இலை, பழம், பட்டை எல்லாமே மருத்துவத்திற்கு பயன்படுகிறது. பிலிப்பைன்ஸில் இலைகள் "டீ’யாக தயாரிக்கப்பட்டு, ஜுரம் தணிய உபயோகப்படுகிறது. ஆயுர் வேதத்தில் வயிறு, ஜீரணக்கோளாறுகளுக்கு புளி பயன்படுகிறது. அமெரிக்கா மருந்துகள் தயாரிக்க வருடத்தில் 90,000 கிலோ புளியை இறக்குமதி செய்கிறது. புளி சூட்டைத் தணிக்கும். புளி நீரில் கரைத்து உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இளம் சூட்டில் பற்றுப்போட ரத்தக் கட்டுகள் கரையும். புளியந் தண்ணீரை கொப்பளித்தால் வாய்ப்புண்கள் குறையும். புளி, சுண்ணாம்பு கலந்து குழப்பி சூட்டோடு தேள் கொட்டிய இடத்தில் போட, விஷம் இறங்கும். புளியங்கொட்டை பருப்பை இடித்து பொடியாக்கி, பசும்பாலில் அரைக்கரண்டி சுளைபோட்டு கற்கண்டு கலந்து குடித்து வர தாதுவிருத்தி உண்டாகும். புளியங்கொழுந்துடன் பருப்பு சேர்த்து செய்த கூட்டை சாப்பிட்டு வர உடல் நலம் பெறும். புளியம் பூக்களை துவையலாக அரைத்து உண்டால் மயக்கம், தலைச்சுற்றல் தீரும். புளிய மரப்பட்டையும் மருத்துவ குணம் கொண்ட "டானிக்’. புளியமர வேர்களிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகள் குஷ்டரோகத்திற்கு உபயோகப்படுகின்றன.

No comments:

Post a Comment