Labels

Showing posts with label ஆண்மைக் குறைவு. Show all posts
Showing posts with label ஆண்மைக் குறைவு. Show all posts

Thursday, June 18, 2015

ஆண்மைக் குறைவு, மலட்டுத்தன்மை



சர்ச்சை
ஐந்தாம் தலைமுறை வைத்தியர்கள், பிரத்யேக தினங்க ளில் தரிசனம் தருகிற லாட் ஜ் ஸ்பெஷலிஸ்ட்டுகள், 10 மணிக்குமேல் பாடம் நடத் துகிற டி.வி. டாக்டர்கள் புண்ணியத்தால் ஆண்மைக்குறைவுக்கு அறிமுகம் தேவையில்லை . ஆனால், அதைப்
பற்றிய அவசரமுடிவு ஒன்று எடுக்க வேண்டிய அவசியத்தை மதுரை உயர் நீதிமன்றம் இப்போது உருவாக்கியுள்ளது.
‘ஆண்மைக்குறைவு, இல்லற உறவில் விருப்பமின்மை போன்ற காரணங்களினால் குடும்ப உறவில் விரிசல் ஏற்படுகிறது. இதன் கார ணமாக இருதரப்பினரும் பாதிக்க ப்படுகின்றனர். இது இப்போது பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதற்குத்தீர்வுகாண, ‘திருமணத்துக்குமுன் ஆண், பெண் இருவருக்கு ம் மருத்துவப் பரிசோதனை கட்டாயம்’ என்று ஏன் சட்ட ம் கொண்டு வரக் கூடாது என்பதற்கு, மத்திய-மாநில அரசுகள் பதிலளிக்கவேண்டும்’ என்று விவாகரத்து வழக்கு ஒன்றை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதி பதி என்.கிருபாகரன் இடைக்கால உத்தரவு பிறப்பித்தி ருக்கிறார். பல தரப்பிலும் விவாதங்களை உருவாக்கி இருக்கும் இந்தப் பிரச்னை பற்றி சிறுநீரகம் மற்றும் ஆண் மலட்டுத்தன்மை மருத்துவரான ஏ.ராஜசேகரனி டம் தினமலர் எடுத்த பேட்டி இது
ஆண்களை மட்டுமே குறை சொல்ல வேண்டுமா?
 ‘‘தாம்பத்தியத்தில் ஆண், கொடு ப்பவனாகவும் (Active partner), பெண், பெறுபவளாகவும் Passive partner)  இருக்கிறாள். ஒரு உற வின்தன்மை, நேரம் எல்லாவற் றையும் தீர்மானிப்பது ஆண்தான் … பெண்ணின் பங்களிப்பு இதில் குறைவு.  நீதிமன்றம் குறிப்பிட்டிருக் கும் இல்லற உறவில் விருப்பமில்லாத பெண்களின் குறையைக் கூட (Frigidity) எளிதில் சரிசெய்து விட முடியும். பெண்களின் மற்ற பாலியல் குறைபாடுகளும் சரிசெய்யக் கூடிய வையே.
சென்னை குடும்பநல நீதிமன்றத்தில், 2008ம் ஆண்டு 88 விவாகர த்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அதன் எண்ணிக்கை 2013ல், 715 ஆக உயர்ந் துள்ளது. இந்த 715 வழக்குகளில் பெண்கள் மேல் உள்ள குற்றச்சாட்டு காரணமாக விவா கரத்து கேட்டிருக்கும் வழக்குகள் ஐந்தோ ஆறோதான். ஆண்களை குற்றம் சாட்ட வேண்டும் என்பதோ, ஆண்களின் குறை பாடுகள் சரி செய்ய முடியாதவை என்று பயமுறுத்து வதற்காகவோ இதைச் சொல்லவில்லை. தாம்பத்தியத்தில் பெரும்பொறுப்பு வகிக்கிற ஓர் ஆண், தன்னைப் பரி சோதித்துக் கொண்டு குறைகள் இருந்தால் சரி செய்து கொள்ள முன்வர வேண்டும் என்பது தான் இதில் முக்கியம்…’’
ஒரு சான்றிதழின் மூலம் ஆண்மையை நிரூபி த்துவிட முடியுமா?
‘‘மருத்துவரீதியாக ஓர் ஆண், தகுதியானவன், தகுதியற்றவன் என்பதைத் தீர்மானிக்க முடியா து. பரிசோதனையில் ஆரோக்கியமாகத் தெரியும் ஓர் ஆண் நடை முறையில் அப்படியே இருப்பான் என்பதற்கும் உத்தரவாதம் இல் லை. சிலர் தன்பாலின விருப்பம் கொண்ட ஹோமோ செக்ஷு வலாகஇருப்பார்கள். சிலர் போ தைப் பழக்கம் காரணமாக மனைவியை தவிர்ப்பார்கள்… சிலரால் மனைவியுடன் மட்டும் உறவில் ஈடுபடமுடியாது. மற்ற பெண்களிடம் நார்மலாக இருப் பார்கள் (Selective impotence). இதுபோன்ற நபர்களைப் பரி சோதித்தால் ஆரோக்கிய மாக இருப்பதாகவே முடிவுகள் காட்டும்.பரிசோதனையில் சரியாக இல்லாத ஆண், நடைமு றையில் சரியாகச்செயல்படுபவராகவும் இருக்கலா ம்.
பாலியல்உறவில் மனம் பெரும்பங்கு வகிப்பதுதான் இதற்குக் காரணம். துணை எப்படிப்பட்டவள், அவர்களுக்குள் இருக்கும் அன்யோன்யம், சூழல் போன்ற வேறு பல காரணங்களும் இருக்கின்றன. ஆனால், இப்பரிசோதனையின் மூலம் பால்வினை நோய்கள், மலட்டுத்தன்மை, உடல் குறைகள், மனநல பாதிப்புகள் போன்றவற் றையும் கண்டுபிடித்து சரிசெய்ய முடி யும்…’’
 
ஆண்மலட்டுத்தன்மைக்கும் ஆண்மை யின்மைக்கும் என்ன வித்தியாசம்?
‘‘ஆண்மலட்டுத்தன்மை, ஆண்மைக்குறைபாடு இரண்டும் வேறு வேறு. தாம்பத்தியத்தில் தன்னுடைய துணையை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் ஒருவருக்கு உயிரணுக்கள் காரணமாக மலட்டுத் தன்மை இ ருக்கலாம். ஒருபெண்ணுடன் உறவு கொள்ளமுடியாதவர், தந்தையாகத் தகுதியுள்ள உயிரணுக்களை கொ ண்டிருக்கலாம். இதில் இன்னொரு விஷயம். ஆண்மையின்மை கார ணமாக விவாகரத்து கேட்கமுடியும். மலட்டுத்தன்மையைக் காரண ம் காட்டி விவாகரத்து கேட்க முடியாது…’’

திருமணத்துக்கு முன்பு மருத்துவப் பரிசோதனை சாத்தியம் தானா?
பிறப்பு இறப்புச்சான்றிதழ்கள் சட்டமாக்கப்பட்டுள்ளன. திருமணப் பதிவும் சட்டமாக்கப்பட்டு நடை முறையில் உள்ளது. அதே போல, திருமணத்துக்கு முந்தைய மருத்துவப் பரிசோதனையும்சட்டம் ஆக்கப்பட்டால்தான் இந்தப் பிரச்ச னைக்குத் தீர்வு கிடைக்கும். அதை த்தான் நீதியரசர் கிருபாகரன் கூறி யிருக்கிறார். பெண் வீட்டார் மாப்பி ள்ளை வீட்டாரிடம் ‘உங்கள் மகன் ஆண்மகன்தானா?’ என்று கேட்க முடியாது. ஏன், மாப்பிள்ளை யின் வீட்டாருக்கே கூட தெரியாது. சில வீடுகளில், மாப்பிள்ளையின் குறை யை மறைத்துத் திருமணம் செய்து வைப்பதும் உண்டு. அதனால், பரி சோதனை சட்டமாக்கப்பட்டால் இந் த வழக்குகளின் விகிதங்கள் பெருமளவும் குறைய வாய்ப்பிருக்கி றது…’’

தம்பதி என்ன செய்ய வேண்டும்?
‘‘துணையிடம் குறை இருப்பதை உணர்ந்தால், அவருக்குத் தைரியம் கொடுத்து மருத்துவரிடம் அழைத் து வரவேண்டும். நான்கு சுவர்களு க்குள்ளேயே சண்டை போட்டுக் கொண்டு நிம்மதியிழப்பதினால் எந்த லாபமும் இல்லை. தம்பதிக் குள் பிரிவினையை ஏற்படுத்துபவர்க ளாகக் குடும்பத்தினரே இருக்கிறார்கள் என்பதும் கசப்பான உண்மை. மூன்றாம் நபர் தலையீடு வராமல் தம்பதிகள் தங் களை தற்காத்துக் கொள்வதும் இதில் முக்கியம்…’’
ஆண்மைக்குறைவுக்கு சிகிச்சை இருக்கிறதா?

‘‘இன்று மருத்துவம் பலவிதத்திலும் முன்னேறி இருக்கும் நிலையில் ஆண்மைக்குறைவுக்குப் பல்வேறு சிகிச்சைகள் இருக்கின்றன. செக்ஸில் மனம் பெரும்பங்கு வகிக்கிறது என்று முன்பே சொன்னேன். நம் நாட்டில் போதுமான பாலியல் அறிவு இல்லாததால் தேவையற்ற குழப்பமும் பயமுமே பலரது வாழ்க்கையை கெடுத்து விடுகி றது. இவர்களில் பலரும் மனரீதியான பிரச்னை உள்ளவர்கள்தான். அதனால், 90% பேர் கவுன்சலி ங் கொடுத்தாலே குணமாகி விடுவார்கள். 5% பேருக்கு மருந்துகள், மாத்திரைகள், சிகிச்சைகள் தேவைப்படும். மீதி 5% பேர் மட்டுமே கொஞ்சம் தீவிரமாகக் கவனிக்கப்பட வேண்டிய வர்கள். அத ற்கு, பிரச்னை என்னவென்று முதலில் மருத்துவ ருக்கு தெரியவேண்டும். பிரச்சனையை மனதுக்கு ள்ளேயே வைத்துக்கொண்டு மறைக்க முயற்சிப்ப து, துணையைத் தவிர்ப்பது, அடிப்பது, மற்றவர்க ளோடு தொடர்புபடுத்திப் பேசுவது, திருமண உறவு க்கு வெளியே இன்னொருவருடன் தொ டர்பு ஏற்படுத்திக் கொள்வது போன்றவை ஆக்கப்பூர்வமான செயல் கள் அல்ல…’’
பாலியல் கல்வி ஏன் அவசியம்?

‘‘பாலியல் கல்வி என்றவுடனே பதறிப் போய் அதெல்லாம் தப்பு என்று சொல் கிறவர்கள் இன்னும் இருக்கிறார்கள். பாலியல்கல்வியில் கிளர்ச்சியூட்டுகி ற படங்களை காட்டப்போவதில்லை … கதைகள் சொல்லப் போவதில்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் தங்களது உடல்பற்றிய அறிவுகொஞ்சமாவது இருக்கவேண்டும். விளையாட் டுப் பிள்ளைகளாக இருந்து திடீரெ ன வாலிப வயதுக்குள் நுழையும் ஓர் ஆணும் பெண்ணும் திடீரென உடல் மாற்றங்களால் குழப்பமடை கிறார்கள். இதைப் புரிய வைக்க வேண்டிய கடமை நமக்குண்டு…’’
இப்போது நடக்கிற சம்பவங்கள் திருமணமாகாதவர்களை குழப்பாதா?
‘திருமணத்துக்கு முன்பு ஒரு மனநல மருத்துவரையோ, பாலியல் சிகிச்சை மருத்துவரையோ சந்தித்து தனக்கிருக் கும் சந்தேகங்க ளை தீர்த்துக் கொள்ள முன்வர வேண்டும். ஏதேனும் பிரச்ச னைகள் இருப்பது தெரிந்தால் அதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு அதன் பின் திருமண வாழ்க்கைக்குள் நுழையலாம். உண்மையில், பயம்காரணமாகவே மருத்துவரை சந்திப்பதைப் பலரும் தவிர்க்கிறார்கள். ரகசியமாக இதற்கு ஏதேனும் தீர்வு கிடைக்குமா என்று தேடி போலி மருத்துவர்களிடம் மாட்டிக் கொண்டு பணத்தை யும் ஆரோக்கியத்தையும் இழக்கிறார்கள். அதை யெல்லாம் தவிர்க்க இந்த வழக்கு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது என்று நம்பு கிறேன்!’’
தயக்கம் என்ன?
குழந்தையின்மைக்கான பரிசோதனைக்கு முன் வருவதில் ஆண்களுக்கு இருக்கும் அதே தயக்கம், இந்த விஷயத்திலும் இருப்பதாக ச் சொல்கிறார் உளவியல் ஆலோ சகர் வசந்தி பாபு. மாற்றம் தேவை ப்படுகிற விஷயங்கள் குறித்தும் பேசுகிறார் அவர்.‘ ‘பிரச்சனைனு சொல்லிக்கிட்டு கணவன்-மனைவி ரெண்டுபேரும் வருவாங்க. தன க்குத்தான் பிரச்னைங்கிற மாதிரியே இருக்கும் மனைவியோட அணுகுமுறை. பேசிப்பார்த்தா, கணவருக்குத்தான் பிரச்னைங்கிறது தெரிய வரும். குழந்தையில்லைங்கிற நிலை மையில ஒரு பெண் தன்கிட்ட பிரச்சனை இரு க்கலாம்னு சந்தேகப்பட்டு பரிசோதனைகளு க்குத் தயாராகிற மாதிரி, ஆண்மைக் குறை பாடுகள் விஷயத்துல ஒரு ஆணால தைரியமா முன் வர முடியறதில்லை.
ஆண்மைக்குறைபாடுங்கிறதை ரெண்டு வித மாபார்க்கலாம். சின்ன வயசுல அந்த ஆணுக்கு ஏற்பட்ட செக்ஸ் வன்முறை, மோச மான அனுபவங்கள், அது தொடர்பான அருவெறுப்பான சம்பவங்கள், பயம்னு உளவியல் ரீதியான பிரச்னைகள், அதனால தாம்பத்திய உறவுல ஈடுபட முடியாமப் போகறது ஒரு வகை.  உண்மையிலேயே உடம்புல பிரச்னைகள் இருந்து, அதனால தாம்பத்திய உறவுல ஈடுபட முடியாத நிலை இன்னொரு வகை. இதுல முதல் வகைக் குறை பாட்டை கவுன்சலிங்ல சரிப்படுத்தலாம். அடுத்ததுக்கு மருத்துவ சிகிச்சை அவசியம். தனக்கு ‘கருமுட்டை வளர்ச்சி சரியில்லை, கர்ப்பப்பை யில கோளாறு’னு ஒரு பெண் தய ங் காம சொல்ற மாதிரி, ஆணும் தன்னோட பிரச்னைகளை வெளி யில சொல்லத் தயாராகணும். கவுன்சலிங் மூலமா சரி செய்யக்கூடிய பல பிரச்னைகளும் தீர்க் கப்படாம பெரிசாகக் காரணம், அந்த ஆண் தரப்புல உள்ள தயக்கம். ஆலோசனைக்கு வந்தாலே பிரச்னை தீர்ந்த மாதிரிதான்…’’