பிளட் பிரஷரை குறைக்கும் தர்பூசணி!
அரிசி, சர்க்கரை, உப்பு உள்ளிட்ட வெள்ளை நிறத்திலான உணவுகள் பலவற்றை உடலுக்குக்குக் கெடுதல் என்பார்கள். ஆனால், வெள்ளைப் பூசணிக்காய்க்கு நிறைய மருத்துவக் குணங்கள் உள்ளன. இதேபோல் தர்பூசணியில் சிவந்த சதைப்பாகம் மட்டுமல்லாது தோலை ஒட்டியிருக்கும் வெள்ளை நிற சதைப்பாகத்துக்கும் நிறைய மருத்துவக் குணங்கள் உள்ளன.
வெள்ளைப் பூசணிக்காயை ஜூஸாக்கி வெல்லம்,ஏலக்காய்த்தூள் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் தீராத வயிற்றுப்புண் தீரும். அதுமட்டுமல்லாமல், பெண்களின் வெள்ளைப்போக்கு, ரத்தம் – சீழுடன் சிறுநீர் வெளியேறுதல் போன்ற வியாதிகளையும் இந்த பூசணிக்காய் ஜூஸ் குணப்படுத்தும்.
தர்பூசணியின் வெள்ளை நிற சதைப்பாகம் ஆண்மை சக்தியை அதிகரிக்கும் வல்லமை படைத்தது. மேலும், உடம்பில் உள்ள கொழுப்பை கரைக்கக்கூடியது. ரத்தக்குழாய்களில் படியக்கூடிய கழிவுகளையும் அகற்றி சுத்தம் செய்யும். உயர் ரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்தி ரத்த ஓட்டத்தை சீராக்கக்கூடிய தன்மை கொண்டது. மற்ற பழங்களில் இல்லாத சத்துகள் பலவும் தர்பூசணியில் உள்ளன. உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும், சுறுசுறுப்பாக இயங்கவும் உதவுக்கூடியது தர்பூசணி.